விளாத்திகுளத்தில் பாஜக வடக்கு ஒன்றியம் சார்பில் நாளை நமதே தமிழ்நாடும் நமதே மத்திய அரசு பட்ஜெட் விளக்க சக்தி கேந்திர தெருமுனை கூட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் பாஜக சார்பில் மத்திய அரசு சாதனை மற்றும் பட்ஜெட் விளக்க சக்தி கேந்திர தெருமுனை கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெறும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் குறித்தும், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டையேன் குறித்தும் கடுமையாக விமர்சித்து தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி நிர்வாகிகள் பேசினார்.
சக்தி கேந்திர பொறுப்பாளர் மூர்த்தி தலைமை தாங்கினார், பாஜக வடக்கு ஒன்றிய தலைவர் காட்டுராஜா முன்னிலை வகித்தார். இந்தநிகழ்வில் பாஜக மாவட்ட தலைவர் சரவணகிருஷ்ணன், பொதுச்செயலாளர் சேதுராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, ஒன்றிய பிரதிநிதி கனகவேல்ராஜ், நிர்வாகிகள் சக்தி,பெஞ்சமின்பாண்டியன் பிரச்சாரபிரிவு மாவட்ட தலைவர் கந்தசாமி, ஓ பி சி மாவட்டத்துணைத் தலைவர் அருணாச்சலம், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக மாநில மகளிர் அணி இணைச்செயலாளர் செல்வி நேதாஜி,அஇஅதிமுக ஒன்றிய செயலாளர்கள் மகேஷ்,பால்ராஜ், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் பிரியா, மகளிர் அணி மேற்கு ஒன்றிய செயலாளர் சாந்தி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் சேகர், ஜான்பாண்டியன் மற்றும் முத்துரமாலிங்கம் கட்சி ஒன்றிய செயலாளர் செல்வம் மற்றும் பாஜக நிர்வாகிகள், அஇஅதிமுக நிர்வாகிகள் நகரசெயலாளர் மாரிமுத்து ஆசைத்தம்பி, சண்முகசாமி, முனியசாமி, மருதுபாண்டி, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆனந்த்,அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.