விளாத்திகுளத்தில் “ நாளை நமதே தமிழ்நாடும் நமதே” மத்திய அரசு பட்ஜெட் விளக்க சக்தி கேந்திர தெருமுனை கூட்டம். 




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் க. சுப்பிரமணியபுரத்தில்  தூத்துக்குடி வடக்கு மாவட்டம் பாஜக சார்பில் மத்திய அரசு சாதனை மற்றும் பட்ஜெட் விளக்க சக்தி கேந்திர தெருமுனை கூட்டம் நடைபெற்றது.தமிழகத்தில் நடைபெறும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் குறித்தும், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேனையும்,திமுக அரசு குறித்தும் கடுமையாக விமர்சித்து தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி நிர்வாகிகள் பேசினார்.


பாரதிய ஜனதா கட்சி விளாத்திகுளம் வடக்கு மண்டல் சார்பாக சக்தி கேந்திர அளவிலான தெருமுனை பாரதிய ஜனதா கட்சி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கலந்து கொண்டனர்.   

கூட்டம் ஒன்றிய செயலாளர்  காட்டுராஜா முன்னிலையில் நடைபெற்றது,  இந்நிகழ்வில் கிளைத்தலைவர்கள் பாலமுருகன் கருப்பசாமி, பிரச்சார பிரிவு மாநிலத் தலைவர் பெஞ்சமின் பாண்டியன், பிரச்சார பிரிவு மாவட்டத் தலைவர் கந்தசாமி ஓபிசி அணியின் மாவட்ட துணைத்தலைவர் அருணாச்சலம், விவசாய அணி மாவட்ட துணை தலைவர் சங்கரசுப்பு, சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் மூர்த்தி, முருகன், மாரிமுத்து மற்றும் அஇஅதிமுக முன்னாள் கவுன்சிலர் பெருமாள்சாமி,மகளிர் அணி ஒன்றிய தலைவர் சாந்தி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.