இன்றைக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு சில தலைவர்கள் மாவட்டத்திற்கு ஒரு இடத்திற்கு மட்டுமே செல்கின்றனர்: விஜய்யை தாக்கிப் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூரில் நடைபெற்ற அதிமுக பூத்பாகம் வார்டு கழக நிர்வாகிகள்,ஆன்லைன் நிர்வாகிகள், நேரில் ஒருங்கிணைந்து பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜீ கலந்து கொண்டு கலந்து கொண்டு பேசுகையில்...
• இன்று தமிழகத்தில் புதிய ஒரு சில அரசியல் தலைவர்கள் மாவட்டத்தில் ஒரு இடத்திற்கு மற்றும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர், மீதமுள்ள சட்டமன்ற தொகுதி மக்களை அவர்கள் பார்க்க செல்வதில்லை என்றும், ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இரவு 10-30 மணி ஆனாலும், அனைத்து தொகுதி மக்களையும் சென்று சந்தித்து வருகிறார் என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை சாடி முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜீ பேசினார்...
• அதனைத் தொடர்ந்து பேசுகையில் இனி 5 அமாவாசை மட்டும் தான் உள்ளது 6 வது அம்மாவாசை முடிந்த பின் பௌர்ணமியாக மாறி நாட்டு மக்களுக்கு வெளிச்சம் தரக்கூடிய ஒளி விளக்கு தரக்கூடிய 2026-ல் அதிமுக ஆட்சி தான் அமையும்...
• தெம்பு,திராணி,தைரியம் இருந்தால் தான் மக்களை சந்திக்க முடியும், இன்றைக்கு திமுக அரசு தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் கூட்டணி கட்சிகளை பார்த்து கெஞ்சி கூத்தாடி , ஆட்சியில் பங்கு வேண்டும் என்று திருமாவளவன்,வைகோ,காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கு வேண்டும் என்று கேட்டால், ஏதோ பார்த்து போட்டுக் கொடுப்போம், நீங்கள் கூட்டணியை விட்டுப் போகாதீர்கள் என்று பயந்து கொண்டு மு க.ஸ்டாலின் இருக்கிறார் என்று கூறினார்...
• திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் 2026 சட்டமன்ற தேர்தலில் வீழ்வது உறுதி, ஏனென்றால் மக்கள் அவ்வளவு கொந்தளிப்பில் இருக்கிறார்கள், இனிமேல் மக்களை ஏமாற்ற முடியாது, 234 தொகுதியிலும் திமுக டெபாசிட் இழக்கும்...
• இன்றைக்கு தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு கெட்டு குட்டி சுவர் ஆயிடுச்சு, விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் கிடையாது நிவாரணம் கிடையாது, விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் அள்ளிக் கொடுத்த அன்றைய அதிமுக முதலமைச்சர் எடப்பாடி யார், இன்று விவசாயிகளுக்கு நான்காண்டுகளாக முறையாக இன்சூரன்ஸ் கிடையாது,இதைக் கேட்பதற்கு அமைச்சருக்கும் சட்டமன்ற உறுப்பினருக்கும் துப்பில்லை, திமுக அரசுக்கு மூடுவிழா நடத்துவதற்கு மக்கள் தயாராகி விட்டனர் என்று கடம்பூர் ராஜு பேசினார்....
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அதிமுக புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவருமான தனஞ்ஜெயன் மற்றும் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தனபதி ஆகியோர் செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், விளாத்திகுளம் முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன், விளாத்திகுளம் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் மகேஷ்,பால்ராஜ், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் போடுசாமி,புதூர் நகர செயலாளர் ஆண்டி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட தலைவர் மோகன், சிறுபான்மை பிரிவு சதீஷ் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.