விளாத்திகுளம் அருகே காட்டுப்பன்றி தாக்கி மூன்று பேர் காயம்: தூத்துக்குடி மாவட்டத்தில் காட்டுப்பன்றிகள் கிடையாது  வனத்துறையினர் தகவல். !

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி,எட்டையபுரம், புதூர், மற்றும் விளாத்திகுளம் பகுதியில் காட்டுப்பன்றி தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்த காட்டுப் பன்றிகள் தற்போது விவசாயிகளையும் தாக்கத் தொடங்கியுள்ளது. 


விளாத்திகுளம் அருகே அயன்கரிசகுளம் பகுதியில் மோகன்ராஜ் என்ற விவசாயி தனது நிலத்தை பார்ப்பதற்காக சென்றபோது, காட்டுப்பன்றி ஒன்று பயிர்களை சேதப்படுத்தியதை பார்த்து சத்தம் போட்டு உள்ளார்.அதேபோன்று அருகில் உள்ள விவசாய நிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் சண்முகராஜ், ராமசாமி ஆகியோரும் காட்டு பன்றியை பார்த்து சத்தம் போட்டு விரட்ட முயன்றுள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த காட்டுப்பன்றி மூன்று பேரையும் தாக்கி உள்ளது. இதில் விவசாயி மோகன்ராஜ்க்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் சண்முகராஜ் ராமசாமி இருவரையும் கை மற்றும் உடல் பகுதியில் கடித்து குதறி விட்டு காட்டுப்பன்றி தப்பி ஓடிள்ளது. இதில் காயம் அடைந்த மூன்று பேரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


விவசாய பயிர்களை அழித்து வந்த காட்டுப்பன்றிகள் தற்போது விவசாயிகளை தாக்கும் நிலைக்கு வந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, தூத்துக்குடி மாவட்டத்தில் காட்டுப்பன்றிகள் கிடையாது வழங்கப்பட்டு கைவிடப்பட்ட பன்றிகளை விவசாய நிலங்களை சேதப்படுத்துவதாகவும், அப்படி சேதப்படுத்தும் பன்றிகளுக்கு வனத்துறையினர் பொறுப்பாக முடியாது, மான்கள் மற்றும் மயில்களால் சேதம் ஏற்பட்ட விவசாய நிலங்களுக்கு மட்டுமே உரிய இழப்பீடு பெற்று தர முடியும் என வனத்துறையினர் கூறுகின்றனர்.