விளாத்திகுளம் அருகே 800 கிலோ இரும்பு பொருட்கள் திருடிய 3 பேர் கைது!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பல்லாகுளம் கிராமத்தில் தனியார் நிறுவன காற்றாலை நிறுவும் பணி நடைபெற்று வருகிறது, காற்றாலை இரும்பு உதிரி பாகங்களை மூன்று பேர் கொண்ட கும்பல் லோடு வேனில் கடத்திச் செல்வதாக சூரங்குடி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் வந்துள்ளது, தகவலின் அடிப்படையில் 800 கிலோ இரும்பு பொருட்களை கடத்தி சென்ற லோடு வேனை மடக்கிப்பிடித்த சூரங்குடி காவல் நிலைய போலீசார் கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்தனர், விசாரணையில் அவர்கள் பல்லாகுளம் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி மகன் வினோத்குமார் (24), பனையூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் பேச்சு முத்து (39),பனையூர் கிராமத்தை சேர்ந்த மாடசாமி மகன் கணேசன் (42) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து திட்டமிட்டு இரும்பு பொருட்களை கடத்தி தூத்துக்குடியில் விற்பனை செய்ய முயன்றது தெரிய வந்தது.