இந்து முன்னணியினர் கைது கண்டித்து  விளாத்திகுளம் அருகே  எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!



திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்பினர் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் இந்து முன்னணியினர், பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபங்களில் சிறைபிடித்து வைத்துள்ளனர். இச்சம்பவம் தற்போது இந்த அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னணி பொறுப்பாளர்கள் நேற்று இரவு முதல் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து இன்று  விளாத்திகுளம் அருகே எட்டையபுரம் பேருந்து நிலையம் முன்பு இந்து முன்னணி அமைப்பைச் சார்ந்தவர்கள் மற்றும் பாஜகவினர் போலீசரின் கைது நடவடிக்கை தடுத்து நிறுத்துவதோடு, கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என கண்டனம் கோஷங்கள் எழுப்பினர். இதனால் போலீசார் ஆர்ப்பாட்டத்தை ஈடுபட்டவர்களை கைது செய்து எட்டயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மேலும் எட்டயபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ள இந்து அமைப்பு சேர்ந்தவர்கள், தமிழக அரசு திருப்பரங்குன்றத்தில் அறிவிக்கப்பட்ட போராட்டத்தை நடத்த விடக்கூடாது என்பதற்காக காவல்துறை மூலம் இந்துக்களை கைது செய்து வருகிறது. இதனை உடனடியாக நிறுத்துவதோடு தமிழக முழுவதும் நேற்று முதல் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்றும், இந்த அரசிடம் "இந்துக்களே உஷாராக இருங்கள்..." என்றும் கூறி தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்  தெரிவித்துள்ளனர்.