மகளிர் உரிமைத்தொகை கிடைக்காமல் விடுபட்டவர்கள் ஜூன் நான்காம் தேதி விண்ணப்பிக்கலாம் - விளாத்திகுளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன் தகவல்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் புதூரில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் பணிகளுக்கான உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமூக நலன் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
519 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் பணிகளுக்கான உத்தரவுகளை வழங்கி அமைச்சர் கீதா ஜீவன் பேசுவையில்,நியாய விலை கடைகளில் தரமான அரிசி வழங்கப்படுகிறது.
இடம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று அரசு புறம்போக்கு நிலங்களில் ஐந்தாண்டுகளுக்கு மேல் குடியிருந்து வருபவர் நிலம் இல்லாத ஏடை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு ரூ.1000 உதவி தொகை வழங்கி வருகிறது,பழமையான தொகுப்பு வீடுகளை பராமரிப்பு செய்வதற்கும் தமிழக முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற கிடையாது.
மகளிர் உரிமைத் தொகையில் தகுதி இருந்தும் ஒரு சிலர் விடுபட்டிருக்கின்றனர் அப்படி உள்ளவர்களுக்கு தமிழக முதல்வர் ஒரு வாய்ப்பு தருகிறார் .ஜூன் நான்காம் தேதி மனுக்கள் வாங்க சொல்லி இருக்கிறார்கள்.அப்போது முறையாக ஆவணங்களுடன் விண்ணப்பியுங்கள் என்றார்.