எட்டையாபுரத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பிறந்தநாள் விழா: மகளிர் அணியுடன் கேக் வெட்டி ,சுகாதார பணியாளர்கள் மற்றும் 200ஏழை எளிய பெண்களுக்கு சேலைகளை வழங்கி கொண்டாடிய பேரூராட்சித்தலைவி!
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர், கழக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினரால் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர், கழக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி பிறந்தநாள் விழாவை பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் தலைமையில் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் மகளிர் அணிகளுடன் கேக் வெட்டி கொண்டாடி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதனைத் தொடர்ந்து சுகாதார பணியாளர்கள் மற்றும் 200ஏழை எளிய பெண்களுக்கு சேலைகளை வழங்கினார், பின்னர் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் எட்டையாபுரம் பகுதி திமுக நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.