"தென் தமிழகத்தின் தொழில் முனையமாக தூத்துக்குடி திகழப் போகிறது.." - தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் பெருமிதம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்ற மாபெரும் வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு கருத்தரங்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கலந்து கொண்டு இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டார் மாணவ - மாணவிகள், இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடம் சிறப்புரையாற்றினார். அப்போது மாவட்ட ஆட்சியர் பேசிய போது, தூத்துக்குடியில் துறைமுகம் அதனை சுற்றியுள்ள தொழில் வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும் என்று "தென் தமிழ்நாட்டின் தொழில் முனையமாக தூத்துக்குடி" மாவட்டம் திகழ வேண்டும் என்ற நோக்கில் நிறைய முயற்சிகளை அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது என்றும், இதற்காக பல்வேறு இடங்களில் புதிய தொழிற்சாலைகள், புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார். அத்தோடு இன்னும் 5 ஆண்டுகளில் தூத்துக்குடி தென்தமிழகத்தின் ஒரு முக்கியமான தொழில் வளர்ச்சிக்கான கேந்திரமாக இருக்கும் என பெருமிதத்துடன் கூறினார். மேலும் இந்த மாபெரும் வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு கருத்தரங்கில் அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசு சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து எடுத்துரைத்தனர். அதுமட்டுமின்றி இந்த மாபெரும் கருத்தரங்கில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கு தனியார் மற்றும் அரசின் பல்வேறு துறைகளில் இருக்கக்கூடிய ஏராளமான வேலைவாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வுகளும் வழங்கப்பட்டன..