தேர்தலுக்கு மட்டும் ஓட்டு கேட்டு வருபவன் அல்ல இந்த மார்கண்டயேன்,தாய்,தந்தை இழந்தவனுக்கு தாயாகவும் தகப்பனாகவும் நான் இருந்து வருகிறேன்!





தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்  தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன்   இளம்புவனம் கிராமத்தில் உள்ள தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என முழங்கிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து இளம்புவனம் கிராமத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் நான் உங்களிடம் ஓட்டு கேட்டு மட்டும் வருபவன் அல்ல, கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றிய குழு தலைவராகவும், பத்தாண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும், பணியாற்றி உங்கள் கிராமங்களில் உள்ள நிகழ்ச்சிகள் முதல் உங்களின் இளநிகழ்ச்சிகள் வரை, உங்களின் சுக துக்க அனைத்து நிகழ்வுகளிலும் நான்  கலந்து கொண்டு உங்களின் ஒருவராக இருந்து வருகிறேன்.



தாய் இல்லாதவர்களுக்கு தாயாகவும் தந்தை இல்லாதவர்கள் தந்தையாகவும், மாமனாகவும், மச்சானாகவும் உங்களின் பிரச்சினைகள் அனைத்துக்கும் நான் தீர்வு கண்டுள்ளேன எனவும்,இதுவரை நான் மக்களுக்கு ஆற்றிய பணிகளை எடுத்துக் கூறியும் திமுக ஆட்சியின் நலத்திட்டங்களை எடுத்துக்கூறியும்  உதயசூரியன் சின்னத்திற்கு மார்கண்டயேன் வாக்கு சேகரித்தார்.




இந்நிகழ்வில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.