இலவச வேற்று அறிவிப்புகளை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்களே? இதுதான் வளர்ச்சியா? இதற்குப் பெயர்தான் ஆட்சியா? இது படித்தவர்கள் வாழ்கின்ற சமூகம் தானா? : விளாத்திகுளத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை!
ஓசி பஸ் தர மாட்டேன் ஏசிபஸ் தான் தருவேன், காசு கொடுத்துப் போ, உரிய கட்டணத்தை செலுத்தி போ!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் வேட்பாளராக இரண்டாவது முறை விவசாயி சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாலாஜி ராமச்சந்திரனை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு திறந்த வெளி வாகனத்தில் கடுமைவெலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்...
அப்போது பேசிய சீமான் உங்கள் பிள்ளைகள் எங்களை பாருங்கள் நீண்ட தூரம் வருகிறோம், என் அன்னை நிலைமை எங்கும் அலைந்து திரிகிறோம், அடிவயிற்றில் இருந்து எடுத்து எடுத்து பேசி, தொண்டை வறண்டு திரிகிறோம் நீண்ட காலம் நமது நிலத்தில் நிலவுகிற தீய அரசியலை மாற்றி தூய அரசியலை மலர செய்ய நல்ல ஆட்சியை அமையச் செய்ய வேண்டும்.
அது பெரிய கட்சி திமுக அது பெரிய கட்சி அதிமுக, இந்த நாட்டில் எந்த கட்சியோடும் கூட்டணி வைக்காமல் மக்களோடு மட்டும் கூட்டணி வைக்கிற கட்சியோ அந்தக் கட்சியோடு மட்டும் தான் எங்கள் கூட்டணி, அந்தக் கட்சியை பிரிய கட்சி அந்தக் கட்சியை எங்கள் கட்சி.
22 கட்சியை கொண்டு சேர்த்து வைப்பது பெரிய கட்சி அல்ல, 10,15 கட்சிகளை கூட சேர்த்து வைப்பது பெரிய கட்சி அல்ல...
எவன் வீரன்? எத்தனை ஆயிரம் பேர்கள் வந்தாலும் எதிர்த்து நிற்பவன் வீரன், எவனையும் எதிர்பார்த்து நிற்பவன் கொலை.
கூட்டத்தில் இருப்பவனுக்கு வீரமோ துணிவோ தேவையில்லை, தனித்து நிற்பவனுக்குத்தான் வீரமும் துணிவும் தேவை...
நேர்மையாளன் துணிந்து தனித்து தான் நிற்பான், நேர்மையற்றவன் தான் கூட்டத்தை சேர்த்துக்கொண்டு களத்துக்கு வருவான்...
60 ஆண்டுகளாக ஆட்சி செய்த கட்சி, நாங்கள் பெரிய கட்சி என்று சொல்பவர்கள் எதற்காக இத்தனை கூட்டணி? இத்தனை கட்சிகள்? ஒரே ஒருத்தன் மட்டும் தான் கட்சி அவனையும் கூட சேர்த்து அவனுக்கும் ஒரு சீட்டு...
நேர்மையான கட்சி பெரிய கட்சிகள் எதற்காக ஓட்டுக்கு காசு கொடுக்க வேண்டும்?
தன் ஆட்சியின் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க முடியாதவர்கள், ஏன் 2000 தருகிறேன் 3000 தருகிறேன் 4000 தருகிறேன்,8000க்கு டோக்கன் தருகிறேன்...
அதிமுகவினர் ஆட்சிக்கு வந்தால் பத்தாயிரம் தருகிறேன்,சிலிண்டர் தருகிறேன்,தாலிக்குதங்கம் தருகிறேன், பிரிட்ஜ் தருகிறேன்,2500 தருகிறேன் என இலவசம் தருகிறேன் இதெல்லாம் ஏன் சொல்ல வேண்டும்.
ஒரு தலைவன் இதெல்லாம் தர மாட்டேன்.
சேலை, வெட்டி,பிரிட்ஜ், சிலிண்டர் 1000, 2000 மோ பொருள்களை நீங்களே வாங்கிக் கொள்ளும் அளவிற்கு, சம்பாதிக்கிற அளவிற்கு உங்களுக்கு வேலை தருகிறேன் என்று எவன் சொல்கிறானோ அவன் தான் தலைவன்...
ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போதெல்லாம், இந்த இலவச வெற்றி அறிவிப்புகளை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்களே? இதுதான் வளர்ச்சியா? இதற்குப் பெயர்தான் ஆட்சியா? இது படித்தவர்கள் வாழ்கின்ற சமூகம் தானா?...
முன்பெல்லாம் தொலை தொடர்பு இல்லை, செய்தி தொடர்பு இல்லை இப்போது உலகம் உள்ளங்கையில் உள்ளது, அனைவர் கையிலும் வலைத்தொலைக்காட்சி தொலைக்காட்சி உள்ளது.
கேரளாவில் தற்போது தேர்தல் முடிந்துள்ளது, இப்படித்தான் ஓட்டுக்கு காசு கொடுத்தார்களா? இப்படித்தான் 2000 தருகிறேன் மிக்ஸி,கிரைண்டர் தருகிறேன் என்று சொன்னார்களா அல்லது வாக்குக்கு பணம் கொடுத்தார்களா? ஏன் அங்கேயும் படித்தவர்கள் இருக்கிறார்கள், இங்கேயும் படித்தவர்கள் இருக்கிறார்கள்...நமக்கு என்ன ஆச்சு மூலிகை வறுத்து சாப்பிட்டு விட்டோமா? எத்தனை காலத்திற்கு தான் நாம் ஏமாந்து கொண்டே போவோம், நமது தாத்த பட்டுக்கோட்டையினார் பாடியது போல் ஏமாறுகிறவர்கள் இருவரும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே தான் இருப்பான்.
வாக்குக்கு காசு கொடுக்கிற போது அந்த இடத்திலே நாம் போராடி பெற்ற சுதந்திரமும், நாம் உருவாக்கிய ஜனநாயகமும் செத்து விடுகிறது என்பது படித்தவர்களுக்கு தெரியவில்லையா? மக்களுக்கான சேவை என்பது இறந்து, அந்த முதலீட்டாளர்கள் வாக்குக்கு காசு கொடுப்பவர்களின் லாபத் தேவை வந்துவிடுகிறது என்பது உங்களுக்கு தெரியவில்லையா?.
ஆட்சியாளர்கள் தவறு செய்கிறார்கள் என்று நினைக்கிறேன் அந்த ஆட்சியாளர்களை தேர்வு செய்த நாம்தான் மிகப்பெரிய தவறு செய்கிறோம்.
ஆபிரகாம் லிங்கன் சொல்கிறார் ஒரு நாட்டை ஆள்பவன், நல்ல ஆட்சியை கொடுக்கவில்லை,தப்பான ஆட்சியை செய்கிறான் என்றால் ஆட்சியாளன் மற்றும் பொறுப்பல்ல அவனை தேர்வு செய்த மக்களும் பொறுப்பேற்கவேண்டும் என்றார்.
சாராயம் குடித்து சாவது, கள்ளச்சாராயம் குடிச்சு செத்தவனுக்கு 10 லட்சம் கொடுத்த அரசு, நீ ஓட்டு போட்டு தேர்வு செய்த அரசு கொடுத்ததை நீங்கள் ஏற்கிறீர்களா? சட்டப்படி கள்ளச்சாராயம் குற்றம் என்கிறது, குடிப்பதையும் குற்றம் என்கிறது, சட்டப்படி 10 லட்ச ரூபாய் கொடுத்து ஊக்கப்படுத்துகிறது அதை நீங்கள் இருக்கிறீர்களா?
ஒரு நடிகனை பார்க்க போய் கூட்ட நெரிசலில் செத்தவனுக்கு 10,12 லச்சம் அரசு கொடுக்கிறது, அதை ரசிக்கிறாய்,ஏற்க்கிறாய், நாட்டைக் காப்பாற்ற எல்லையில் நின்று போராடி செத்து வந்த ராணுவ வீரனுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை அதையும் ஏற்கிறீர்களா? ரசிக்கிறீர்களா? படிப்பகத்தில் பாருங்கள் எத்தனை பேர் கூடியிருக்கிறார்கள், டாஸ்மாக்கில் பாருங்கள், நூலகத்தில் பாருங்கள், திரையரங்கில் பாருங்கள், இந்த சமூகத்தை எதை நோக்கி கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரிய வேண்டாமா?.
சரி இலவசம் கொடுக்கிறார்கள் பத்தாயிரம் கொடுக்கிறார்கள் 20,000 கொடுக்கிறார்கள், மிக்ஸி, கிரைண்டர்களில் இலக்கும் பணத்தை எங்கிருந்து எடுக்கிறார்கள்? நம்மிடமிருந்து வரியை எடுத்து நமக்கே கொடுப்பது இலவசமாக எப்படி ஆகும்? அந்தக் கேள்வி ஏன் நமக்குள் எழவில்லை...
நமக்கு இங்கு என்ன இல்லை நிலம் இல்லையா? வளம் இல்லையா? கடல் இல்லையா? மலையில்லையா? காடு இல்லையா? கரும்பு இல்லையா தென்னை இல்லையா? ஆடு இல்லையா?மாடு இல்லையா எல்லாம் இருக்கே அப்புறம் ஏன் நாம் அரிசி பருப்புக்கு கையேந்த வேண்டும்.
ஒரு வளமும் இல்லாத சிங்கப்பூரில் மக்களுக்கு இலவசங்கள் கொடுப்பதில்லை, அங்கே நல்ல கல்வி, வேலை,மருத்துவம் ஆகியவற்ற இலவசமாக கொடுக்கிறார்கள், அங்கே நல்ல தலைவன் இருந்த ஆட்சி செய்கிறார்கள்.
இங்கு எல்லாம் இருந்த நம் நாடு வறுமையில் சிக்கித் தவிக்க காரணம், ஊழல் லஞ்சமே நிர்வாகம் ஆகி போன காரணம்தான் என்று உங்களுக்கு தெரியாதா?, உங்கள் அறிவு எதை நோக்கி பயணிக்கிறது எதை சிந்திக்கிறது?.
திமுகவை விட்டால் வழியில்லையா? அதிமுகவைவிட்டால் வழி இல்லையா ? இதை இரண்டையும் விட்டால் நீங்களே வழியாக மாறிவிடுவீர்கள், உங்கள் பிள்ளைகளை பாருங்கள்...
நாங்களே நடந்த நடந்து ஒரு புதிய பாதையை உருவாக்கி வரவில்லையா? ஓட்டுக்கு ஒரு ரூபாய் காசு கொடுக்கவில்லை, ஜாதி சொல்லவில்லை, மதம் சொல்லவில்லை, சாராயம் தரவில்லை,பணம் தரவில்லை, 36 லட்சம் எங்களை வாக்கு செலுத்தி மூன்றாவது பெரும் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட கட்சி,
இந்தத் தேர்தலில் 50 தொகுதிகளில் பெட்டிகளில் முதல் இடத்தில் எங்களின் சின்னம் வந்துள்ளது, முதல் பெட்டியில் 1,2,3 ஆகிய வரிசையில் எங்களது விவசாயி சின்னம் வந்துள்ளது. அதற்கு காரணம் நீங்கள் எங்கள் மீது நம்பிக்கையோடு செலுத்திய வாக்கு.
வீரமாமுனிவர் எழுதியுள்ள கோழியாதிங்கிற ஒரு பெரிய பூதத்தை, தாவீதுங்குற ஒரு சின்னப் பையன் ஒண்டி வில்லால் களிமண் உருண்டையை உருட்டி நெத்திப்போட்டில் அடித்து வீழ்த்திடுவான், அதே போல்தான் இந்த திமுக,அதிமுக திராவிட பூதத்தை உங்கள் மகன் ஒரே அடியாக நெத்திப்பொட்டில் அடித்து வீழ்த்துவேன்.
ஐயா கருணாநிதிக்கு முடியலைன்னா காவேரி மருத்துவமனையில் போய் படுத்துக்கிடுவாரு, அம்மா ஜெயலலிதாவிற்கு முடியலை என்றால் அப்போலோ மருத்துவமனையில் போய் படுத்துக்கிருவாரு, ஆனால் இனி யாருக்கு உடம்பு முடியவில்லை என்றாலும் அரசு மருத்துவமனை தான், அரசு அதிகாரி அமைச்சர்கள் என அனைவருக்கும் முடியவில்லை என்றாலும் அரசு மருத்துவமனைக்கு வரவைக்கிற நிலைமையை நான் உருவாக்குவேன். இதை இரண்டையும் கட்டணமில்லாமல் தருகிறேன் மூன்றாவது குடிநீரை கட்டணம் இல்லாமல் தருகிறேன், தண்ணியை விலை கொடுத்து வாங்கிய நிலைமைக்கு உங்களை நான் வைக்கவில்லை, தண்ணீர் மனிதனுக்கு மட்டுமல்ல உலக உயிரினங்களுக்கு உயிர் தேவை.
இதை மூன்று தவிர அனைத்தையும் காசு வாங்கி தான் தருவேன், அனைத்தையும் தரமாக தருவேன், மின்சாரம்,எரிகாற்று சாலை, போக ஓசி பஸ் தர மாட்டேன் ஏசிபஸ் தான் தருவேன், காசு கொடுத்துப் போ, உரிய கட்டணத்தை செலுத்தி போ, நீ போராடி உழைத்துப் பெறாத எந்த பொருளுக்கும் மதிப்பு இருக்காது, நான் உனக்கு இலவசமாக மின்சாரம் தந்தால் நீ வீட்டை விட்டு செல்லும் பொழுது மின்சாரத்தை அணைத்து விட்டு செல்ல மாட்டாய், எரிகாற்று சிலிண்டரை ஓசியாக தருகிறேன், அடுப்பை அணைத்து விட்டு செல்வீர்களா? பொருளின் மதிப்பு உங்களுக்கு தெரிய வேண்டும்.
ஆனால் மதிப்பு மிகுந்த மூன்று பொருளை உங்களுக்கு கட்டணம் இல்லாமல் தருகிறேன்,கல்வி, மருத்துவம்,குடிநீர் ஆகியவற்றைத் தருகிறேன்.
மத்த எல்லாவற்றையும் கட்டணத்தோடு தருவேன், தட்டுப்பாடின்றி தருவேன், தரமாக தருவேன் இதெல்லாம் வேண்டுமென்றால் விவசாய சின்னத்திற்கு போடு, இந்தக் கேடுகெட்ட ஆட்சி தான் தொடர வேண்டும் என்றால் மீண்டும் அவர்களுக்கு போடு.
விளாத்திகுளம் பகுதியில் பல்வேறு கிராமங்களை காணவில்லை என்று அப்பகுதியில் இருந்தவர்கள் சீமானிடம் கூறிய நிலையில், சீமான் இன்னும் கொஞ்ச நாளில் விளாத்திகுளமே காணவில்லை என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன்...என்று தொடர்ந்துசீமான் பரப்புரை மேற்கொண்டார்.