கடந்த முறை உள்ளாட்சித் தேர்தலில் 20% தருவதாக கூறி ஏமாற்றி விட்டனர் - இவ்வளவு நாள் ஏமாந்து விட்டோம் இனி ஏமாற மாட்டோம் ஏமாற மாட்டோம்- விடமாட்டோம்!
இன்றைக்கு இளம் தலைவராக விஜய் வந்துள்ளார். உண்மையில் அவருக்கு ஆதரவு நல்லா இருக்கிறது - கூட்டணி கணக்குகள் எல்லாம் பல மாறிப் போய்க் கொண்டிருக்கிறது. விளாத்திகுளத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்தில் வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள் சாமி பேச்சு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம். இதில் அக்கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள் சாமி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில்
யாரும் நம்மை ஏமாற்ற முடியாது. முதுகில் குத்த முடியாது. குத்தினால் திரும்ப முதுகில் குத்தி விடுவோம்
இனி வருங்காலங்களில் காங்கிரஸ் கட்சிக்காரர்களை யாரும் ஏமாற்ற முடியாது
இவ்வளவு நாள் ஏமாந்து விட்டோம் இனி ஏமாற மாட்டோம் ஏமாற மாட்டோம்
. விடமாட்டோம்
கடந்த முறை உள்ளாட்சித் தேர்தலில் நமக்கு கூட்டணியில் 20% தருவதாக தெரிவித்திருந்தனர் ஆனால் ஏமாற்றி விட்டனர்
2029 இல் ராகுல் காந்தி நிச்சயமாக பிரதமராக வருவார். பாஜக சுவரை முட்டிவிட்டது. அது கீழ விழப்போகுது
உலகத்தின் தீய சக்தி பாஜக தான். பாஜக அழியப்போகிறது
காங்கிரஸ் இல்லையென்றால் நாடு துண்டாடப்படும்.
இன்றைக்கு காங்கிரஸ் கட்சியை நம்பி ஒவ்வொரு கூட்டணிக் கட்சியினரும் எங்க கிட்ட வாங்க வாங்க என்று ஏங்குகின்றனர்
ஒரு காலத்தில் எப்படி இருந்த கட்சியை ராகுல் காந்தி இன்று எப்படி கொண்டு வந்துவிட்டார்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி போகிறது என்று கேட்க வைத்து விட்டார்.
இன்றைக்கு இளம் தலைவராக விஜய் வந்துள்ளார். உண்மையில் அவருக்கு ஆதரவு நல்லா இருக்கிறது இல்லை என்று சொல்லவில்லை
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் அனைத்து பூத்துக்களிலும் ஆட்கள் போடுவோம். போடவில்லை என்றால் காதை அறுத்து காட்டுகிறேன். இந்த பதில் பூத் கமிட்டிக்கு ஆளில்லை 3000 பேர் 4000 பேர் தான் இருப்பார்கள் என்று சொன்னவங்களுக்கு இந்த பதில்
கடந்த முறை உள்ளாட்சித் தேர்தலில் 20% தருவதாக ஒப்பந்தம் போட்டுவிட்டு ஏமாற்றிவிட்டனர் என்பதுதான் உண்மை
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 12 முதல் 15 சதவீதம் ஓட்டு வங்கி இருக்கிறது. ஆனால் நமக்கு எட்டு சதவீதம் இருப்பதாக கூறுவார்கள்
கூட்டணி கணக்குகள் எல்லாம் பல மாறிப் போய்க் கொண்டிருக்கிறது என்றார்.