"இனி அதிமுகவிற்குள் உள்குத்து இருக்கவே கூடாது":விளாத்திகுளம் அருகே கட்சியினருக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எச்சரிக்கை..!
தமிழகம் முழுவதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் பெற்று வருகிறது. இதையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் புதூரில் தனியார் திருமண மண்டபத்தில், கழகச் செயலாளர்கள் தனவதி மற்றும் சுசீலா தனஞ்செயன் ஏற்பாட்டில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், என்.கே.பெருமாள் முன்னிலையில் மாபெரும் அதிமுக செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயக்குமார் மற்றும் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு கட்சியினரிடைய 2026 தேர்தல் குறித்து ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார்கள். இதற்கு முன்னதாக அதிமுகவின் 53-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு புதூர் பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள அதிமுக கொடி கம்பத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குடியேற்றி கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதையடுத்து செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கட்சியினரிடம் பேசுகையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் 43 தொகுதிகளில் 1 லட்சத்து 92 ஆயிரம் வாக்குளை நீங்கள் பெற்றுக் கொண்டிருந்தால், திமுக என்ற கட்சி தமிழ்நாட்டில் இல்லாமல் போயிருக்கும்,
2021 சட்டமன்றத் தேர்தல் வியூகங்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வகுத்து கொடுத்தார். அதைப் பின்பற்றி 75 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றோம். மற்றவர்களிடம் கேட்டதற்கு.. உள்குத்து, வெளிக்குத்து என்கிறார்கள். "இனி அதிமுகவில் உள்குத்து இருக்கவே கூடாது என்று கட்சியினரிடம் எச்சரித்தார்."
எதிர்க்கட்சியாக இருக்கும் போதெல்லாம் துரைமுருகன் துணைக்கு வர வேண்டும்... கருணாநிதிக்கு துணையாக இருக்க வேண்டும், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு துணையாக இருக்க வேண்டும், உதயநிதி ஸ்டாலினுக்கு துணையாக இருக்க வேண்டும், அன்பு நிதிக்கு துணையாக நிற்க வேண்டும்... மாண்புமிகு அமைச்சர் வெட்கம், மானத்தை விட்டு கெஞ்சி பார்த்தார் என்னுடைய பெயரை பரிந்துரை செய்யுங்கள் என்று ஆனால் ஒன்றும் பருப்பு வேகவில்லை... "துணையாக இருப்பதற்கு மட்டும்தான் துரைமுருகன், துணை முதலமைச்சர் என்றால் அது உதயநிதி தான் என்று ஏதாவது முன்னேற்றக் கழகத்தின் மாடல் இன்றைக்கு வெளியே வந்திருக்கிறது.
இன்றைக்கு இருக்கக்கூடிய இதே உற்சாகம், புத்துணர்ச்சி இருந்திருந்தால் 2021-ல் மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்திருக்கும், திமுக என்கிற கட்சி தமிழகத்திலேயே அழிந்து போயிருக்கும் என்று தெரிவித்தார்.