திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்ட 100-க்கும் மேற்பட்ட திமுகவினர்!


விளாத்திகுளம் திமுகவினர் மத்தியில் பரபரப்பு!


தூத்துக்குடி மாவட்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில்,விளாத்திகுளம் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் ஏற்பாட்டில், விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினரின் சொந்த ஊரான ராமச்சந்திராபுரம் கிராமத்தைச்சேர்ந்த தொழிலதிபர் கண்ணன்,கேசுந்தரேஸ்வரபுரம் கிராமத்தை சேர்ந்த சிற்பி என்ற சுப்புராஜ், விளாத்திகுளம் மெக்கானிக் பிச்சைக்கனி உள்ளிட்ட 100-க்கு மேற்பட்டோர் திமுகவினர் திமுகவில் இருந்து விலகி முன்னாள் அமைச்சரும்,அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.


திமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்தவர்களை அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அதிமுகவின் வேஷ்டி மற்றும்  சால்வை துண்டுகளை அணிந்து உற்சாகமாக வரவேற்றார்.இந்தநிகழ்வில் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தனஞ்செயன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தனவதி, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டத்தலைவர் மோகன்,சிறுபான்மை நலப்பிரிவு சதீஷ்,அதிமுக நிர்வாகிகள் கண்ணன், வேல்முருகன்,குட்டி என்ற மந்திர மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இன்னும் சில நாட்களில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் திமுகவிலிருந்து  ஏராளமானோர் அதிமுகவில் இணைந்தது விளாத்திகுளம் தொகுதி திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.