தூத்துக்குடி மாவட்டம்விளாத்திகுளம் அருகே உள்ள கீழ்நாட்டுக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்டது சக்கிலிபட்டி கிராமம். இக்கிராமத்தில் ஊர் முகப்பு பகுதியில் மக்களின் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தும் வகையில் அடிபம்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடைகள் பயன்பெறும் வகையில் அடிபம்பு அருகில் நீர் தொட்டியும் ஒன்றுள்ளது. இந்த அடிபம்பு பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த அடிபம்பு அருகே குடிநீர் தேவைகளுக்காக நீர் நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக அடிபம்பு அருகே பெரிய குழி தோண்டப்பட்டுள்ளது. மேலும் அதில் தோண்டிய மண்ணை வெளியே கொண்டு போய் போடமால் அடிபம்பு மீது போட்டு மூடியுள்ளனர்.. அடிபம்பின் கைப்பிடி மட்டுமே வெளியே தெரிகிறது.
இதனால் பொதுமக்கள் அடிபம்பினை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் அருந்த முடியமால் கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.. எனவே அடிபம்பு மீது போட்டுள்ள மண்ணை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Vilathikulam
அடிபம்பின் பரிதாப நிலை - அவதியுறும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் !
அடுத்த
கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும்!
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026