தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலையைச் சேர்ந்த சந்திரன் என்பவர் வீரபாண்டியபுரம் கிராமத்தில் குடோன் வைத்து உளுந்து, பாசி, கம்மம்புல் உள்ளிட்டவற்றை மொத்தமாக வாங்கி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் சந்திரன் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவிட்ட காரணத்தால் இவரது குடோன் அருகில் உள்ள டீக்கடையை நடத்தி வந்த வீரபாண்டியபுரதத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் - சண்முகத்தாய் தம்பதியினரிடம் குடோன் மற்றும் அதன் வரவு, செலவு கணக்குகளை பார்த்துக்கொள்ளும் படி ஒப்படைத்துவிட்டுச் சென்றுள்ளார். அதன்படி, கடந்த 1 மாதத்திற்கு மேலாக சண்முகத்தாய் மற்றும் அவரது கணவர் குடோனை பராமரித்து வந்த நிலையில், கடந்த மே 9-ம் தேதியன்றும் வழக்கம் போல குடோனிற்கு கொண்டுவரப்பட்ட தானியங்களை வாங்கி வைத்துவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளனர். மறுநாள் காலை வந்து பார்த்தபோது குடோனின் பூட்டு உடைக்கப்பட்டு கிடைப்பதைக் கண்ட சண்முகத்தாய் - ரவிச்சந்திரன் தம்பதியினர் குடோன் உள்ளே சென்ற பார்த்ததில், குடோனில் இருந்து 50 கிலோ எடை கொண்ட 12 மூடை உளுந்து, 45 கிலோ எடை கொண்ட 2 மூடை கம்மம்புல் மற்றும் 40 கிலோ எடை கொண்ட 2 மூடை பாசிப்பயறு என கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள தாயனிய வகைகள் திருடு போயிருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து உடனடியாக குடோன் உரிமையாளர் சந்திரன் மற்றும் குளத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து உடனடியாக அங்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டதில், முத்துக்குமாரபுரம் வடக்குத்தெருவைச் சேர்ந்த மாரியப்பன்(42), வெள்ளத்துரைப்பெருமாள்(29) மற்றும் பெருமாள்சாமி(38) ஆகிய மூன்று பேர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. பின்னர் உடனடியாக குளத்தூர் காவல் நிலைய போலீசார் மூன்று பேரையும் கைது செய்து அவரிடமிருந்து திருடப்பட்ட தானிய மூட்டைகளை பறிமுதல் செய்ததோடு.. மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Vilathikulam
ரூ.1 லட்சம் மதிப்புள்ள உளுந்து, பாசி, கம்பு திருட்டு - 3 பேர் கைது!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கமுதி மாணவிக்கு பாஜக அண்ணாமலை ரூ.25 ஆயிரம் வழங்கி வாழ்த்து மடல்!
அடுத்த
மேல்மாந்தை கிராமத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை.
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026