விளாத்திகுளம் அருகே புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பணியினை விளாத்திகுளம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள முத்துக்குமாரபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 17.10 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கொல்லம்பரம்பு கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 17.10 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பணியினையும் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணியினையும் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டையன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார்,ஜவஹர், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இமானுவேல், முள்ளூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி, கொல்லம்பரம்பு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கௌரி கருணாகரன்,எப்போதும்வென்றான் அருள்மிகு சோலைசாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் முத்துக்குமார்,உட்பட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.