"வீடு இல்லை" என விளாத்திகுளம் MLA-விடம் கோரிக்கை வைத்த பெண்மணி : நேரில் சென்று பார்வையிட்டு அடுத்த நொடியே அதிகாரிகளுக்கு உத்தரவு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாதலக்கரை கிராமத்தில் பல ஆண்டுகளாக முறையான சாலை வசதி இன்றி மழைக்காலங்களில் அக்கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்ததால் தொடர்ந்து தங்களது கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், கோரிக்கை மனுக்களை அளித்தும் சிமெண்ட் சாலை அமைக்க வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் வாதலக்கரை கிராம மக்களின் கோரிக்கை ஏற்று ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் கிராமத்தில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த சாலை அமைக்கும் பணியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்ற பெண் ஒருவர், "தனக்கு வீடு இல்லை... என்றும், தான் தகர குடிசையில் வாழ்ந்து வருகிறேன்" எனக்கு அரசு சார்பில் வீடு கட்டிக் கொடுத்து உதவ வேண்டும் என்றும் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தார். அப்பெண்ணின் கோரிக்கையை கேட்ட எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜெயலட்சுமி தங்கி இருந்த தகர குடிசையை நேரில் சென்று பார்வையிட்டு தன்னுடன் ஆய்விற்கு வந்த அதிகாரிகளிடம் இந்தப் பெண்ணிற்கு "கலைஞரின் கனவு இல்லம்" திட்டத்தில் வீடு கட்டிக்கொள்ள ஆணை பிறப்பிக்க வேண்டும் என உடனடியாக உத்தரவிட்டு வீடு வேண்டுமென்று கோரிக்கை வைத்த பெண்ணிற்கு சில நிமிடங்களிலேயே கோரிக்கையை நிறைவேற்றி மகிழ்ச்சியை அளித்தார்...