தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட பிச்சித்தலைவன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அய்யனார் மீது அதே கிராமத்தைச் சேர்ந்த இந்திராணி என்பவர் தனக்கு இலவச பட்டா தர ஆட்சேபனை செய்த காரணத்தினால் கிராம நிர்வாக அலுவலர் அய்யனார் மீது தன்னை தாக்கியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பொய்யாக காவல்துறையில் புகார் அளித்த சம்பவத்தை கண்டித்தும், இந்த போலியான செய்தியை சமூக வலைத்தளங்களில் பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் தூத்துக்குடி மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் மாவட்டம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் விளாத்திகுளம் வட்டத் தலைவர் வினோத் தலைமையிலும், செயலாளர் செல்வகுமார், பொருளாளர் கயல் வேந்தன் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்தச் சேர்ந்த ஏராளமான விஏஓக்கள் கலந்து கொண்டு பிச்சதலைவன்பட்டி விஏஓ அய்யனார் மீது பொய் குற்றச்சாட்டு கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர்.
Vilathikulam
விஏஓ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
நடைபெற்றது வரும் கட்டிட பணிகளை MLA மார்க்கண்டேயன் ஆய்வு செய்தார்.
அடுத்த
மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து செயல்முறை விளக்க விழிப்புணர்வு மற்றும் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026