விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரத்தில் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் மாநில சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் மாநில சங்கத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்க வட்ட தலைவர் சண்முகராஜ் தலைமை தாங்கினார், தூத்துக்குடி கிராம உதவியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் காளிராஜன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கீழ்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.கிராம உதவியாளர்களுக்கு D.கிரேட் ஊதியம் வழங்கிட வேண்டும், கிராம உதவியாளர்கள் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி அரசு ஆணை எண்.33-ல் திருத்தம் செய்து கருணை அடிப்படையில் வேலை வழங்கிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு எட்டையாபுரம் தாலுகா உட்பட்ட கிராம உதவியாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.