எட்டையாபுரத்தில் ரூ, 1.84 - கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் பதிவு துறையில் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் புதிதாக ,ரூ,1-84 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலக கட்டிடத்தினை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார், திறந்து வைத்ததை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் குத்து விளக்கு ஏற்றி பார்வையிட்டார், உடன் துணைப்பதிவுத்துறை தலைவர் திருநெல்வேலி மண்டலம் செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர் மார்கண்டேயன் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்.. நிகழ்வில் துணைப் பதிவுத்துறை தலைவர் செந்தமிழ்செல்வன் உட்பட கழக நிர்வாகிகள் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.