சாலை விபத்தில் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவரின் மகன் உயிரிழப்பு.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ் அவர்களின் மூன்றாவது மகன் தாமரைச்செல்வம் (27), இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார், சில மாதங்களாக அவரின் தந்தையின் டீக்கடையை கவனித்து வந்துள்ளார், இந்தநிலையில் தாமரைச்செல்வம் அவரது நண்பருமான விளாத்திகுளம் சாலையம் தெரு பகுதியை சேர்ந்த குருசாமி என்பவரின் மகன் ஸ்ரீராம்(33) ஆகியோர் இருவரும் இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டியில் இருந்து விளாத்திகுளம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது, திட்டங்குளம் அருகே முன்னாள் சென்ற டிராக்டர் மீது தாமரைச்செல்வம் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், பலத்த காயம் அடைந்த தாமரைச்செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், ஸ்ரீராம் காயமடைந்து தற்போது கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர், இந்தவிபத்துக்கு குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் விளாத்திகுளம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.