வெண்பா பனி பொழிவு காரணமாக கருகும் மிளகாய் செடிகள் - விளைச்சல் கடுமையாக பாதிப்பு!



விதை வித்துக்கு கூட வரவில்லை  - விவசாயத்திற்கு வாங்கிய கடனை எப்படி அடைப்பது? கண்ணீர் விடும் விளாத்திகுளம் பகுதி விவசாயிகள்...




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் மிளகாய் வத்தல் (முண்டு ரகம்) அதிக காரத்தன்மையுடன் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. எனவே, அவற்றை இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிமாநிலங்கள், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர். விளாத்திகுளம் பகுதியில் தற்போது சுமார் 30ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மிளகாய் வத்தல் பயிரிட்டுள்ளனர்.


120 நாட்கள் பயிரான மிளகாய், வழக்கமாக தை மாத கடைசியில் முதல் பறிப்பும், மாசி மாதம் 2-வது வாரத்தில் இரண்டாம் பறிப்பும், பங்குனி தொடக்கத்தில் 3-ம் பறிப்பும் என, 3 கட்டங்களாக  பறித்து, அவற்றை வெயிலில் காய வைத்து, வத்தலான பிறகு விற்பனைக்கு அனுப்புவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக  வறட்சி, அதிக மழை என விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு சாகுபடி செய்யும் பரப்பளவு குறைந்து வருகிறது.


இந்த சூழ்நிலையில் இந்தாண்டாவது மிளகாய் தங்களுக்கு கை கொடுக்கும் என்று எதிர்பார்த்து காத்தியிருந்த விவசாயிகளுக்கு அதிகளவு பொழிந்து வரும் வெண்பா பனி காரணமாக விளைச்சல் ஏமாற்றத்தினை தந்துள்ளது. வெண்பா பனி காரணமாக  மிளகாய் சொடிகள் கருகி வருகிறது. இதனால்

ஒரு ஏக்கருக்கு 5 குவிண்டால் மகசூல் கிடைக்க வேண்டிய இடத்தில், ஒரு குவிண்டால் மிளகாய் தான் கிடைத்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


ஒரு ஏக்கருக்கு 35 ஆயிரம் வரை செலவு செய்த நிலையில் ரூ. 10ஆயிரம் கிடைப்பதே சிரமம் என்றும், வட்டிக்கு வாங்கி தான் செலவு செய்துள்ளோம். அதனை எப்படி திரும்ப செலுத்த  போகிறோம் என்று தெரியவில்லை. கடந்த சில ஆண்டுகளாக விளைச்சல் பல்வேறு காரணங்களால் பயிர்காப்பீடு மற்றும் நிவராண தொகை கிடைக்கவில்லை. இந்த முறையாவது அரசு தங்களின் நிலையை கருத்தில் கொண்டு ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று வேதனையுடன் கூறுகின்றனர்.




வெண்பா பனி காரணமாக மிளகாய் செடிகள் கருகி விளைச்சல் பாதிக்கப்பட்ட நிலையில் விதைத்து கிடைக்கமால்  போவது மற்றொரு புறம் விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது. பொதுவாகவே அப்பகுதி விவசாயிகளா தாங்கள் சாகுபடி செய்யும் மிளகாயில் இருந்து தான் விதை வித்துக்கள் அடுத்து அடுத்த முறைக்கு பயன்படுத்துவது வழக்கம். வீரிய ரக விதைகளை பயன்படுத்துவதில்லை.இந்த வெண்பா பனிப்பொழிவு காரணமாக விதை வித்துக்களை சேகரிக்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



பேட்டி : கண்ணன் - விவசாயி.