விளாத்திகுளம் அருகே கிராமசபைக் கூட்டத்தில் ஆட்சியரிடம் பல்வேறு அடிப்படை வசதி கோரிக்கைகளை முன்வைத்த பொதுமக்கள்!
அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி முன்னிட்டு நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் விஜயதசமி மற்றும் தசரா பண்டிகையை முன்னிட்டு விடுமுறை என்பதால் அதற்குப் பதிலாக இன்று தமிழக முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது, இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன்பொம்மையாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், மார்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து கேட்டறிந்தனர்.
கிராமசபை கூட்டத்திற்கு வந்திருந்த பனையடிப்பட்டி மற்றும் சாலமோன்நகர் பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தருமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர்,மேலும் போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள்.
கூட்டத்தில் தூத்துக்குடி கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ஐஸ்வர்யா, உதவி ஆட்சியர் (பயிற்சி).புவனேஷ், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சாந்தி, கோவில்பட்டி மாவட்ட சுகாதார அலுவலர் வித்யா விஸ்வநாதன், விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித்,தங்கவேல் விளாத்திகுளம் வட்டாட்சியர் கண்ணன், விளாத்திகுளம் உதவி செயற்பொறியாளர் மின்விநியோகம் செந்தில்குமார், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.