விளாத்திகுளம் அருகே 46 ஆண்டுகளாக விதவை உதவி தொகை வழங்க அமைச்சரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த மூதாட்டி - மகளிர் உரிமைத்தொகை  மேல் முறையீடு செய்ய அவகாசம் உள்ளது அமைச்சர் கீதா ஜீவன்! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கே.துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த இராமமூர்த்தி என்பவரின் மனைவி அமுதமலர் (35) நேற்று முன்தினம்(01.11.2023) விவசாய பணிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பி கொண்டிருக்கும்போது திடீரென மின்னல் தாக்கியதில் அமுதமலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதாஜீவன், மின்னல் தாக்கி உயிரிழந்த அமுதமலர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.அப்போது, மின்னல் தாக்கி உயிரிழந்த அமுதமலரின் பெண் பிள்ளைகள் கவனமான பாத்துக்கோங்க... நல்லபடியா வளக்கனும்‌‌... என்று அமைச்சர் கீதாஜீவன் அவர்களின் உறவினர்களிடம் கண்கலங்கி ஆறுதல் கூறிச் சென்றார்...அதனைத் தொடர்ந்து அமைச்சர் கீதா ஜீவனிடம் கிராம பெண்கள் மகளிர் உரிமைத் தொகை தங்களுக்கு தற்போது வரை வரவில்லை என்று புகார் மனு அளித்தனர், அப்போது அதை கிராமத்தை சேர்ந்த  வீரநாகு என்ற மூதாட்டி தனக்கு 65 வயதாகிறது  எனது கணவர் 19 வயதில் இறந்து விட்டார், நான் 46 ஆண்டுகளாக  விதவை உதவித்தொகை போராடிக் கொண்டிருக்கிறேன், தற்போது வரை எனக்கு விதவை உதவித்தொகையும் வரவில்லை, மகளிர் உரிமைத் தொகையும் வரவில்லை என்று  அமைச்சர் கீதா ஜீவனிடம்  கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார், இதைத் தொடர்ந்து அங்கு  இருந்த வருவாய் துறை அதிகாரிகளை, அமைச்சர் கொடுக்கப்பட்ட புகார் மனு மீது  நடவடிக்கை எடுக்குமாறு கடிந்து கொண்டார், மகளிர் உரிமைத் தொகை  வராத பெண்களுக்கு  மேல்முறையீடு செய்ய அவகாசம் இருக்கின்றது என்று அமைச்சர் கீதா ஜீவன்  கூறிச் சென்றார். இந்நிகழ்வில், கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபால், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் அரசு அதிகாரிகள், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ்  ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா உடனிருந்தனர்.