விளாத்திகுளத்தில் ரூ..1 கோடியே 83 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சார்பதிவாளர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்!
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, கழுகுமலை, ஆழ்வார்திருநகரி, அதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, பெருநாழி, திருநெல்வேலி மாவட்டம் வடக்கு வீரவநல்லூர் முக்கூடல், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மற்றும் குமராட்சி,தென்காசி மாவட்டம் சிவகிரிஉள்ளிட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட் 12 சார்பதிவாளர் அலுவலகத்தை தமிழக முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து இன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார், இதன் ஒரு பகுதியாக விளாத்திகுளத்தில் ரூபாய் 1 கோடியே 83 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்,இதற்கு முன்னதாக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் புதிதாக கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) அசோகன், விளாத்திகுளம் சார்பதிவாளர் ஆதிலெட்சுமி,விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து,விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி உட்பட கழக நிர்வாகிகள்,துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.