விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கிய உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் பேரிடர் நிவாரண நிதி வழங்கிய எம்.எல்.ஏ!



கடந்த 10-10-2026 வெள்ளிக்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள காடல்குடி - வி.சுப்பையாபுரம் கிராமத்தை சேர்ந்த சீனிவாசகம் என்பவரின் மகன் குருமூர்த்தி (33) தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மிளகாய் மற்றும் வெங்காய பயிர்கள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கனமழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்கியதில் குருமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


இந்நிலையில் உயிரிழந்த குருமூர்த்தியின் குடும்பத்தாரிடம் இன்றைய தினம் முதலமைச்சரின் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ரூ.4- லட்சம் அடங்கிய காசோலையை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் வழங்கி ஆறுதல் கூறினார்.

.உடன் விளாத்திகுளம் வட்டாட்சியர் கண்ணன் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி,  உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.