சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்களை சால்வை அணிவித்தும் நினைவு பரிசுகள் வழங்கிய விளாத்திகுளம் MLA !
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 51-ஊராட்சிகளில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் மற்றும் அடிப்படைத் தேவையான குடிநீர்வசதி,சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட பணிகள் குறித்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்துகொண்டு துறை சார்ந்த அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.. மேலும் சூரங்குடி மற்றும் கழுகாசலபுரம் ஊராட்சியில் தூய்மை காவலர் மற்றும் சுகாதார சிப்பந்தி திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்களை சால்வை அணிவித்தும் நினைவு பரிசுகள் வழங்கியும் வாழ்த்தினார்..
கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித்,தங்கவேல் உட்பட ஒன்றிய பொறியாளர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.