புதிய சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கான இடத்தினை விளாத்திகுளம் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழமங்கலம் ஊராட்சி,கப்பிக்குளம் கிராமத்தில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.உடன் ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன், உட்பட கழக நிர்வாகிகள்,கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.