விளாத்திகுளம் அருகே புதிய கலையரங்கம் மற்றும் நியாயவிலை கட்டிடத்தினை மக்களின் பயன்பாட்டிற்காக எம்.எல்.ஏ திறந்து வைத்தார்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள முதலிபட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலையரங்க கட்டிடத்தினையும் அதே கிராமத்தில் ரூபாய் 9.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலை கடை கட்டிடத்தினையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து இனிப்புகள் வழங்கினார்.



இந்நிகழ்வில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல்,ரஞ்சித் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல்,புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன்,தொழிலதிபர் செல்வகுமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.