விளாத்திகுளம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை MLA திறந்து வைத்தார்.


தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திகுளம் அருகே உள்ள சிவஞானபுரம் ஊராட்சியில் தேசிய நலவாழ்வு குழுமம் திட்டத்தின் கீழ் ரூ. 1-கோடி 20-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததை தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் குத்துவிளக்கேற்றி வெளிநோயாளி பிரிவை திறந்து வைத்தார்.


நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர் இன்பராஜ், குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வினோத் கன்னிகா, உட்பட சுகாதாரப் பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.