ஒரு பாட்டு பாடுங்கள் என்று கேட்ட அமைச்சர்... அடுத்த நொடியே பாடல் பாடி அசத்திய அங்கன்வாடி மையக் குழந்தைகள் :அ ங்கன்வாடி மையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கீதாஜீவன்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரம் பேரூராட்சி 11வது வார்டில் 12 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர கீதா ஜீவன் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பின மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். 


புதிய நியாய விலை கடையை திறந்து வைத்த அமைச்சர் கீதா ஜீவன் அருகில் இருந்த அங்கன்வாடி மையத்தில் திடீரென‌ ஆய்வு மேற்கொண்டார். குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து சாப்பிட்டு ஆய்வுமேற்கொண்டார். பின்னர் அங்குள்ள குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கிய அமைச்சர் கீதா ஜீவன் , குழந்தைகளிடம் ஒரு பாட்டு பாடுங்கள் என்று கேட்டார். குழந்தைகளும் உடனடியாக பாடல் பாடி அசத்தினர். அவர்களை அமைச்சர் பாராட்டினார். இதையடுத்து திமுக சார்பில் அமைக்கப்பட்ட இலவச நீர் மோர் பந்தலையும் அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.