கடந்த 5 ஆண்டுகள் தான் தமிழ்நாட்டின் பொற்காலம்: விளாத்திகுளம் திமுக வேட்பாளர் மார்கண்டயேன் தீவிர வாக்கு சேகரிப்பு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரான திமுக வேட்பாளர் மார்கண்டயேன் கோட்டநத்தம், ஜமீன்செங்கல்படை,மீனாட்சிபுரம்,கே.குமாரபுரம் அயன்செங்கல்படை, மந்திகுளம்,மார்த்தாண்டம்பட்டி,வடமலைசமுத்திரம்,பூசனூர், குமாரசக்கனாபுரம்,அரசங்குளம்,புளியங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், அப்போது பேசிய திமுக வேட்பாளர் மார்கண்டயேன்...
கடந்த விளாத்திகுளம் தொகுதியில் 24 மணி நேரமும்,365 நாட்களும், சட்டமன்றத்திற்கும் விடுமுறை போடவில்லை, தொகுதியில் வேலை செய்வதற்கும் விடுமுறை போடவில்லை, விளாத்திகுளம் தொகுதியில் உள்ள 443 கிராமங்களுக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து உழைத்து உள்ளேன்...
தமிழக முதலமைச்சரும் பெண்களுக்கான உரிமைத் தொகை திட்டம், சுய உதவிக்குழுக்கள் மேம்பாடு அடைகிறதிட்டம், மகளிருக்கான விடியல் பேருந்தில் இலவச பயணம், கல்லூரியில் படிக்க புதுமைப்பெண்திட்டம்,தமிழ்புதல்வன் திட்டம், பள்ளிகளில் காலை உணவு சிற்றுண்டி திட்டம் என இதே மாதிரி எண்ணிலடங்காத திட்டங்களை கடந்த ஐந்தாண்டுகளாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்குகொடுத்துள்ளார், ஆக கடந்த ஐந்தாண்டு காலம் தான் தமிழக மக்களுக்கு பொற்காலம் எனக்கூறி உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர்கள் இமானுவேல், அன்புராஜன், சின்னமாரிமுத்து பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு மற்றும் கூட்டணி கட்சியினர் என பலர் கலந்து கொண்டனர்.