உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முகமாக, முதல்வரின் முகவரியாக தான் அரசு அதிகாரிகள் மக்களிடம் மனுக்களை பெறுகின்றனர் - விளாத்திகுளம் எம்.எல்.ஏ.மார்க்கண்டேயன் பேச்சு!


தமிழகம் முழவதும் கடந்த செவ்வாய் கிழமை முதல் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மகளிர் உரிமைத்தொகை விண்ண்ப்பம், பட்டா மாற்றம் என 16 துறை சார்ந்த பிரச்சினை, கோரிக்கை தொடர்பாக இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பேரூராட்சி வளாகத்தில் இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து அவர் பேசுகையில் மக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றும் விதமாக தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முகமாக, முதல்வரின் முகவரியாக தான் இந்த முகாமில் பங்கேற்றுள்ள அதிகாரிகள் மக்களிடம் மனுக்களை பெற்று வருகி;ன்றனர். இங்கு பெறப்படும் மனுக்களுக்கு 100 சதவீதம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும், முடியவே முடியாது என்று இருக்கும் மனுக்களுக்கு மாற்று ஏற்பாடு என்னவென்று சொல்லி அதற்கு தீர்வுகாண்பார்கள் என்றார். இதில் கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலெட்சுமி, பேரூராட்சி தலைவி ராமலெட்சுமி சங்கரநாரயணன், தாசில்தார் சுபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.