விளாத்திகுளம் அருகே உயிரிழந்த 17 வயது சிறுமி குடும்பத்திற்கு 5 லட்சம் நிவாரண உதவித்தொகை! 



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி  கொலை வழக்கில் தமிழக அரசை கண்டித்து பல்வேறு கட்சியினர் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தி வந்த நிலையில். 


இன்று பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு குழந்தைகள் நல அமைப்பு சார்பாக நீதிமன்றம் உத்தரவின் பேரில் இடைக்கால நிவாரணத் தொகை 5 லட்சம் ஆணையை வருவாய்த்துறை மற்றும்  குழந்தைகள் நல அமைப்பு சார்பாக மாணவியின் பெற்றோரிடம் வழங்கப்பட்டது...


மேலும் தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் இடைக்கால நிவாரணத் தொகை 5 லட்சம் ரூபாய் வழங்குவது மட்டுமின்றி  இந்த வழக்கு முடிந்த பின்னர் நீதிமன்றம் மூலம் முழுமையாக நிவாரணம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அனுசுயா, குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி தலைவர் உமாதேவி, கிராம நிர்வாக அதிகாரி ரமேஷ் ஆகியோர் வழங்கினர்.