மது போதையில்  விளாத்திகுளம் அரசு பேருந்தினை இயக்கிய ஓட்டுநர் கைது !



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கே. சுப்பையாபுரம் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (52). அரசு பேருந்து ஓட்டுனரான இவர் விளாத்திகுளம் அரசு  போக்குவரத்து பனிமனையில் ஓட்டுராக பணிபுரிந்து வந்துள்ளார்.




இந்தநிலையில் கடந்த ஜனவரி-29 ம் ஓட்டுநர் ராமகிருஷ்ணன் விளாத்திகுளம் to திருநெல்வேலி பேருந்தை  திருநெல்வேலியில் இருந்து கோவில்பட்டிக்கு பயணிகளுடன் அரசு பேருந்தை ஓட்டிவந்துள்ளார், அப்போது அவர் குடிபோதையில் நிதானம் இல்லாமல் பேருந்தை இயக்கியுள்ளார். இதனால் பேருந்தில் பயணித்த பயணிகள் பதட்டம் அடைந்ததுடன் கயத்தாறு காவல் சரகத்திற்கு உட்பட்ட சவலாப்பேரி கிராமத்தின் அருகே வரும்போது பேருந்தை சர்வீஸ் ரோட்டில் ஓரம் நிறுத்த கட்டாயப்படுத்தி பேருந்து நின்றவுடன், இது பற்றி கயத்தாறு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற கயத்தாறு காவல் நிலைய போலீசார் பயணிகளுக்கு மாற்று பேருந்தை ஏற்பாடு செய்து கோவில்பட்டிக்கு அனுப்பி வைத்தனர். 



பின்பு அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுனர் ராமகிருஷ்ணனை பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு அவர் மது அருந்தியதற்கான சான்று பெறப்பட்டது. பிறகு வழக்கு பதிவு செய்த கயத்தாறு போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.  



ஓட்டுநர் ராமகிருஷ்ணன் மது போதையில் இரண்டு ஆண்டுக்கு முன்பு மதுரையில் இருந்து விளாத்திகுளம் நோக்கி ஓட்டி வந்த போது பேருந்து விபத்தில் சிக்க முயன்று, பணிஇடை நீக்கம் செய்யபட்டு பின்பு விளாத்திகுளம் பகுதியை சிறந்த முக்கிய அரசியல்வாதியின்  பரிந்துரையின் பேரில்  மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



விளாத்திகுளம் அரசு போக்குவரத்து பணிமனையில் பணிபுரியும் ஓட்டுநர் நடத்தினார்களின் சுய ஒழுக்கங்கள் குறித்து மண்டல மேலாளரும், கிளை மேலாளரும் பரிதாப கண்டுகொள்ளவதில்லை என்ற குற்றச்சாட்டுகளை  சமூக ஆர்வலர்கள் முன் வைக்கின்றனர்.