விளாத்திகுளம் அருகே உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் !
தமிழக முழுவதும் நகராட்சி,பேரூராட்சி, மாநகராட்சி ஊராட்சி கிராம பகுதிகளில்,“உங்களுடன் ஸ்டாலின்” எனும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது, இதில் பட்டா மாறுதல்,முதியோர் உதவித்தொகை, தொழில் வரி விதிப்பு,மகளிர் உரிமைத் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, வியாபாரிகளுக்கான அடையாள அட்டை உள்ளிட்ட 16 துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகைகள் தமிழக அரசு சார்பில் முகாம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில்,மாதராஜபுரம், ரெட்டியபட்டி,வீரகாஞ்சிபுரம், ஊசிமேசியாபுரம்,குமாரசக்கனாபுரம் ஆகிய கிராமபொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற முகாமினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் நடைபெற்று வந்த பணிகளை ஆய்வு செய்து, மனு கொடுக்க வரும் பொதுமக்களின் புகார் மனுகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும், பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என அரசு துறை சார்ந்த அதிகாரிகளிடம் அறிவுறுத்தி, சேவைகள் குறித்து கேட்டறிந்து அரசின் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் இளம் பகவத் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித்,தங்கவேல் விளாத்திகுளம் வட்டாட்சியர் கண்ணன்,சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் விமலா விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல்,மக்கள் பிரதிநிதிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
'