விளாத்திகுளம் அருகே ரூபாய் 11 கோடி மதிப்பீட்டில் மீனவர்களுக்கான நலத்திட்ட பணிகளை முதல்வர் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் மீனவகிராமத்தில் 32 விசைப்படகுகள் மற்றும் 100க்கணக்கான நாட்டுப் படகுகளை கொண்டு சுமார் 2000க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.இப்பகுதியில் அதிக கடல் சீற்றம் காரணமாக அடிக்கடி முகத்துவார பகுதி வழியாக மணல் திட்டுகளை தாண்டி கடல் நீர் கிராமத்திற்குள் கடல் நீர் கிராமத்திற்குள் புகுந்து விபத்துகள் ஏற்பட்டுள்ளது.
அதைப்போல் மீன்பிடி இறங்குதளம் பல ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டதால், தற்போது கடற்கரையில் மண்அரிப்பு ஏற்பட்டு, அதிக அலையின் காரணமாக படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி மீனவர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி வந்தது, அணுகு சாலையும் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதால் மீன் இறங்கதளத்திலிருந்து டன் கணக்கில் மீன்களை ஏற்றி செல்லும் லாரிகள் அதிக எடைதாங்காமல் அடிக்கடி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி வந்தது.
இதனை அடுத்து வேம்பார் மீனவகிராம மக்கள் மாவட்ட நிர்வாக திட்டமும் மக்கள் பிரதிநிதியிடமும் பலமுறை புகார் அளித்து வந்த நிலையில், இன்று தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் மீனவ கிராமத்தில் ரூபாய் 11 கோடியில் தற்காலிக முகத்துவாரம் மற்றும் மீன்பிடி இறங்குதளத்தில் தூர்வாருதல், பழுதடைந்த அணுகுசாலைகள் மற்றும் படகு அணையும் தளத்தினை சீரமைக்கும் பணியினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார், அதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
நிகழ்வில் மீன்வளத்துறை துணை பொறியாளர் வள்ளி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.