ரூ.5.36 கோடி மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாகத் திறந்து வைத்த  முதலமைச்சர்!



மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர்- கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் ரூ.5.36 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தினை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத்  குத்துவிளக்கேற்றி கல்வெட்டினை திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.





நிகழ்வில் திட்ட  இயக்குனர், புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜன்,தினகரன் ஒன்றிய பொறியாளர் ரவிச்சந்திரன்,புதூர் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) செந்தில்குமார்,புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ்,புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி,  விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் வார்டு உறுப்பினர் வெற்றிவேல் உள்ளிட்ட கழக நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.