துருப்பிடித்த கம்பி, கரம்பைமண், உப்புத்தண்ணீர் ஆகியவற்றால் தரமற்ற முறையில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடம்!
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தில் அரசு 24 மணி நேர அவசர சிகிச்சை அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது, சென்னை to தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எட்டையாபுரம் அரசு மருத்துவமனையை நம்பி எட்டையாபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 200 - க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு சிகிச்சை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளுக்கு இங்குதான் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இந்த மருத்துவமனைக்கு போதிய படுக்கை வசதி இல்லாததால் இப்பகுதி மக்கள் கூடுதல் கட்டிடங்கள் வேண்டுமென்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர், இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 கோடியே 50 லச்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு,கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கான கட்டுமான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு பணி தொடங்கப்பட்டது
இந்நிலையில் கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகள் துருப்பிடித்த கம்பிகளாலும், உட்பகுதியில் கரம்பைமண்ணை கொண்டு அடித்தளமாக இருப்பதாகவும், சிமெண்ட் கலவைக்கு மிகவும் குறைவாகவே சிமெண்ட் கலப்பதாகவும், அவ்வாறு அடித்தளம் அமைக்கப்பட்ட காங்கிரிட் மற்றும் கட்டுமான பணிகளுக்கு நல்ல தண்ணிருக்கு பதிலாக உப்பு தண்ணீரை உபயோகப்படுத்துவதாகவும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே நடைபெற்று வரும் தரமற்ற கட்டுமான பணிகளை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து முறையான கட்டிடப்பணிகளை செய்யுமாறு அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.