விளாத்திகுளம் அருகே ஸ்ரீ சதுரகிரி சுயம்பு சுந்தரமகாலிங்கம் உடனுறை ஸ்ரீ மனோன்மணி காயத்ரி அம்பாள் திருக்கோவில் 2-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள L. வெங்கடேஸ்வராபுரம் கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ சதுரகிரி சுயம்பு சுந்தரமகாலிங்கம் உடனுறை ஸ்ரீ மனோன்மணி காயத்திரி அம்பாள் திருக்கோவில் 2-ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில் சிறப்பாக நடைபெற்றது, முன்னதாக சதுரகிரி சுயம்பு சுந்தர மகாலிங்கம் மற்றும் மனோன்மணி காயத்ரி அம்பாளுக்கு பால்,தயிர்,மஞ்சள்,விபூதி,தேன்,இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் மாலை அணிவித்து அலங்கரிக்கப்பட்ட பின் சிறப்பு தீபாதாரணை நடைபெற்றது, முன்னதாக நந்தி பகவான் மற்றும் வளாகத்தில் உள்ள இதர பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.