விளாத்திகுளம் அருகே கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. 154 வது பிறந்த நாள் விழா - புதூர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில்   மரியாதை!



ஆங்கிலேயர்களுக்கு அடிபணியாமல்,ஆங்கிலேயர்களுக்கு எதிராக தனது சொந்த பணத்தில் இந்திய சுதேசிய  கப்பல் விட்டு,இந்தியா சுதந்திரப் போராட்டத்திற்காக சிறை சென்று செக்கிழுத்த செம்மல், சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் 154வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.


இதன் ஒரு பகுதியாக   தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டுள்ள கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. திருவுருவப்படத்திற்கு  புதூர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஒன்றிய செயலாளர் பழனி முருகன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.    




இந்நிகழ்ச்சியில்,A.P. ஸ்ரீனிவாசன்,தலைமை மண்டல் தலைவர் பிரஸ்னவ்,ரமேஷ், காமராஜ், கண்ணன் , அழகர் பாபு, கோமதி சங்கர், அஷ்டலட்சுமி, உண்மைய செல்வம், பாலாஜி, சுப்புராஜ், வெள்ளைச்சாமி, சிதம்பரம், உட்பட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர்  கலந்து கொண்டனர்.