விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 5 லட்சம் மதிப்பிலான பாட புத்தகங்கள் உள்ளிட்டவை தீயில் எறிந்து சேதம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1200,க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்பள்ளியின் விளையாட்டு மைதானம் அருகே உள்ள 2012 ஆம் ஆண்டு கட்டப்பட்டு தற்போது செயல்பாட்டில் இல்லாத இரண்டு வகுப்பறை கட்டிடத்தில் உள் பகுதியில் புகை வருவதாக மாணவ மாணவிகள் தலைமை ஆசிரியர்கள் தகவல் கூறியுள்ளனர்.
தகவல் அறிந்து தலைமை ஆசிரியர் தவசிமுத்து சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்த பின் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கூறினார்.
மேலும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தூத்துக்குடி மாவட்ட தீயணைப்புத் துறை உதவி மாவட்ட அலுவலர் இராஜு, மற்றும் விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் சங்கரன்
ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும் இந்த தீபத்திற்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் தீ அருகாமையில் உள்ள இடத்தில் பரவாதவாறு அந்த இடத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டது இந்த தீ விபத்தினால் அந்த கட்டிடத்தின் சுவர் பகுதியில் விரிசல் ஏற்பட்டது அந்த அறையை சுற்றி உள்ள ஜன்னல்கள் சேதம் அடைந்துள்ளது.
மேலும் அந்த இரண்டு வகுப்பறை கட்டிடத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பாட புத்தகங்கள்,பள்ளி சீருடைகள், பேக்குகள், ஜாமென்ட்ரி பாக்ஸ், கம்ப்யூட்டர் டேபிள், கம்ப்யூட்டர் சேர்,கலர் பென்சில்,சாக்பீஸ் போன்ற 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எறிந்து நாசமாயின ,தீ விபத்து ஏற்பட்ட செயல்பாட்டில் இல்லாத பழைய பள்ளி கட்டிடத்தை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்திட வலியுறுத்தியும் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தீ விபத்து ஏற்பட்ட இரண்டு வகுப்பறை கட்டிடத்திலிருந்து 100 மீட்டர் அளவில் தான் மாணவ-மாணவிகள் பள்ளி வகுப்பறைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.