விளாத்திகுளம்
வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழக ஆசிரியர் கூட்டணி 41வது ஆண்டு துவக்க நாள் விழா நடைபெற்றது. தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் வட்டார தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் 41வது துவக்க நாளை முன்னிட்டு விளாத்திகுளம் அரசு
மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு கொடியேற்று விழா
நடைபெற்றது.
வட்டார தலைவர்
சேர்மக்கனி தலைமை வகித்தார். மாவட்ட பிரதிநிதிகள் பரமசிவன்,கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார
செயலாளர் முத்துப்பாண்டி வரவேற்று பேசினார்.மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் கொடியை
ஏற்றி சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக்
கொண்டனர்.