தமிழக ஊரக 100 வேலைவாய்ப்பு திட்டம் அமல்படுத்தப்படும் : திமுக வேட்பாளர் மார்கண்டயேன் தீவிர பிரச்சாரம்!




மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு திமுக சார்பில் போட்டியிடும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் கமலாபுரம், கூத்தலூரணி,கந்தசாமிபுரம், வள்ளியநாயகிபுரம், ஆர்.வெங்கடேஸ்வராபுரம் (பட்டியூர்), ஊசிமேசியாபுரம், T.சுப்பையாபுரம், வீரபாண்டியபுரம், முத்துராமலிங்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில் விதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.


அப்போது பேசிய மார்கண்டயேன் மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை திட்டத்திற்கு தமிழக மக்கள் ஊதியம் வாங்குவதற்கு மத்திய அரசை எதிர்பார்த்து இருக்கும் நிலையில் தமிழக மக்கள் உள்ளோம், மீண்டும் தமிழகத்தில் திராவிட மாடலா ஆட்சி அமைந்த உடன்,தமிழக சட்டமன்றத்தில் தமிழக ஊடக 100 நாள் வேலை திட்டம் என்று திட்டத்தை ஏற்றி மகளிர் உரிமைத் தொகைக்கு எவ்வாறு தங்கள் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறதோ, அதேபோல் 100 நாள் வேலை திட்டத்திற்கும்  மாதம் மாதம் உங்கள் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்று கூறியும் அப்பகுதியில் செய்த நலத்திட்ட பணிகளை எடுத்துக் கூறியும் திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் திமுக மேற்கு ஒன்றியசெயலாளர் அன்புராஜன்,முன்னாள் கவுன்சிலர் நடராஜன் திமுக நிர்வாகிகள், மற்றும் மதசார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலர் உடன் இருந்தனர்.