தூத்துக்குடியில் தமிழ்நாடு சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

வருடம் ஒருமுறை  தமிழ்நாடு சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் கூட்டமானது நடைபெறுவது வழக்கம் அதன்படி இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை சட்ட விதிகள் ஆய்வுக் குழுத் தலைவர் மார்க்கண்டேயன் எம் எல் ஏ தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர்பாதுகாப்புத்துறை, உள் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை குறித்த குறிப்பாணைகளும், அறிவிக்கைகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.நிகழ்வில் தொகுதி முனைவர் தாரகை கத்பட் மற்றும் சட்டமன்றப் பேரவையில் அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.