மகாகவி பாரதியார் இல்லத்தில் மரியாதை செலுத்திய தமிழக செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் : குழந்தைகளுக்கு பாரதியார் முகமூடி வழங்கி மகிழ்ச்சி! 




மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அமைந்துள்ள பாரதியின் இல்லத்தில் அமைந்துள்ள மகாகவி பாரதியாரின் திருவருள் சிலைக்கு தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாரதியாருக்கு மரியாதை செலுத்த வந்த அமைச்சர் சாமிநாதனுக்கு பள்ளி மாணவிகள் பாரதி பாடல்களை பாடி வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு பாரதியின் முகமூடியை வழங்கி அமைச்சர் மகிழ்வுற்றார். பின்னர் பாரதியின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த மகாகவியின் படைப்புகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு அங்கு தேவையான அடிப்படை வசதிகளை சிறப்பாக செய்து தரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் இறுதியாக பாரதியாரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த வருகை பதிவேட்டில் "மகாகவி என்று மக்களால் அழைக்கப்பட்ட கவிஞர் பாரதியார் வாழ்ந்த இல்லத்திற்கு வந்தவுடன் பெரு மகிழ்ச்சி அடைந்தேன் மாண்புமிகு முதல்வரின் அறிவிப்பிற்கு என்னங்க பல்வேறு சிறப்புகளை மகாகவி யின் பெருமைகளை போற்றும் வகையில் அரசு செய்து வருவதை அனைவரும் அறிவோம் மேலும் பேரன்பு மகாகவி என் பெருமைகளை போற்றும் அரசாக விளங்கும் என்பதில் அச்சமில்லை கவிதை சந்தேகமும் இல்லை" என்று எழுதி தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் கையொப்பமிட்டுச் சென்றார்...