அருப்புக்கோட்டை to தூத்துக்குடி ரயில் பாதைக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழக அரசு :மத்திய அரசின் பட்ஜெட் மற்றும் சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் மற்றும் சாதனை விளக்கத் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் சக்தி கேந்திர பொறுப்பாளர் ஆரிய பவன் முருகன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்க்கு ஒன்றிய தலைவர் காட்டுராஜா முன்னிலை வகித்தார். 



அப்போது ஒன்றிய தலைவர் காட்டுராஜா பேசுகையில் அருப்புக்கோட்டையில் இருந்து விளாத்திகுளம், குளத்தூர் வழியாக  தூத்துக்குடிக்கு ரயில் போக்குவரத்து மத்திய அரசு நிதி ஒதிக்கினாலும், தமிழக அரசு அதற்கான நிலத்தை கையகப்படுத்த முன் வரவில்லை, அவ்வாறு முன்வந்து அருப்புக்கோட்டையில் இருந்து தூத்துக்குடி வரை ரயில் சேவை துவங்கப்பட்டால், அது மத்திய அரசிற்கு நற்பெயர் உண்டாக்கும் என்ற ஒற்றைக் காரணத்திற்காக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை வைத்து தமிழக அரசு விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய ரயில் பாதைக்கான இடம் கையகப்படுத்தும் பணியை நிறுத்தியுள்ளதாக ஒன்றிய தலைவர் காட்டு ராஜா கடுமையாக விமர்சித்தார்.


இந்த நிகழ்வில் மண்டல் தலைவர் தேசிய செயற்குழு உறுப்பினர் போத்தீஸ் ராமமூர்த்தி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கண்ணன், பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் கந்தசாமி, சுற்றுப்புறசூழல் பிரிவு மாவட்டத் தலைவர் கனகவேல்ராஜ், ஓ பி சி அணி மாவட்ட துணை தலைவர் அருணாச்சலம்,ஒன்றிய பொதுச்செயலாளர்கள் செந்தில்குமார், சுப்புராம்,ஒன்றிய துணைத் தலைவர் சீனி தங்கம், ஒன்றிய செயலாளர்கள் விஜய் ,சிங்கராஜ் வர்த்தக பிரிவு மாவட்டச் செயலாளர் கண்ணதாசன், கிளைத்தலைவர் பிரபாகர் மற்றும் ஆ இ அ தி மு க மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், ஜான்பாண்டியன் கட்சி, நிர்வாகிகள் காவி சொந்தங்கள் என பலர் கலந்து கொண்டனர்.