விளாத்திகுளத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம்.  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பாக விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி அவதூறு பரப்பி வரும் ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில்  நடைபெற்றது.

டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த நியூஸ் க்ளிக் இணைய தள பத்திரிக்கையை முடக்கி, டெல்லி விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி அவதூறு பரப்பி வரும் ஒன்றிய அரசை எதிர்த்தும்,  ஊடகவியலாளர்கள், நியூஸ் கிளிக் ஆசிரியர் உள்ளிட்டோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது - சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவிக்க கோரியும் கோஷங்கள் எழுப்பியும் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் புவிராஜ்  விவசாயிகள் சங்க  செயலாளர் லெனின்குமார், ஒன்றிய செயலாளர் வேலாயுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.