விளாத்திகுளம் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்கம் !
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சத்யா தேசிய ஜனநாயக கட்சியினருடன் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல் விளாத்திகுளம் பகுதியில் உள்ள பல்வேறு அமைப்புகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து வருகிறார்.
இந்தநிலையில் தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராஜேசை சுப்பிரமணியாபுரத்தில் உள்ள இல்லத்தில் ஏர் உழவன் விவசாயம் சங்க நிர்வாகிகளுடன் அதிமுக வேட்பாளர் சத்யா சந்தித்து, விவசாயிகளின் அடையாளமான பச்சை துண்டை அணிவித்து இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார்,பின்னர் வேட்பாளர் சத்யாவிற்கு ஏர் உழவன் விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளின் அடையாளமான பச்சை துண்டு அணிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், மகேஷ், பால்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், அதிமுக நகர செயலாளர் மாரிமுத்து,மகளிர்அணி பிரியா, நிர்வாகி முனியசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.